🔴 LIVE NOW — · Join Father now
Logo

Thursday, 09 July 2026 · Midday Prayer

இறை இரக்க செபமாலை

*☦️இறைஇரக்க ஜெபமாலை* (புதிய மற்றும் பழைய பதிப்பு) 🔥✝️🔥✝️🔥✝️🔥✝️🔥 *இன்றைய 3 மணி இறைஇரக்கத்தின் ஜெபமாலைக் கருத்துக்கள்* ✝️🔥✝️🔥✝️🔥✝️🔥✝️ *நம் பாவங்களுக்காகவும், அகில உலகின் பாவங்களுக்கு பரிகாரமாகவும்,* *கடவுள் நம்பிக்கையற்றவர் செய்யும் தெய்வ நிந்தனைகளுக்குப் பரிகாரமாகவும்,* *இயேசுவின் திருஇருதயத்திற்கும், மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு செய்யப்படும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாகவும்,* *பொல்லாத கிறிஸ்தவர்களால் அவருக்கு உண்டாகும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாகவும்,* *பாவிகள் மனந்திருந்தவும் ஒப்புக்கொடுப்போம்..* இயேசுவுக்கே புகழ் ! மாமரித் தாயே வாழ்க ! 🔥✝️🔥✝️🔥✝️🔥✝️🔥 *இறை இரக்கத்தின் ஜெபமாலை* 🔥✝️🔥✝️🔥✝️🔥✝️🔥 *இயேசுவே! நீர் மரித்தீர். ஆனால் இந்த மரிப்பு ஆன்மாக்களின் வாழ்க்கை ஊற்றாகவும் இரக்கத்தின் கடலுமாகவும் வழிந்தோடியது.* *ஓ! வாழ்வின் ஊற்றே! கண்டுபிடிக்க முடியாத இறைவனின் இரக்கமே உலக முழுவதையும் உம்முள் அடக்கி உமது இரக்கம் முழுமையும் எம்மீது பொழிந்தருளும்.* *இயேசுவின் இருதயத்திலிருந்து இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம் மீது நம்பிக்கை வைக்கிறேன். ( மும்முறை )* i) கர்த்தர் கற்பித்த ஜெபம் ii) மங்கள வார்த்தை ஜெபம் iii) விசுவாசப் பிரமாணம் _*ஜெபமாலையின் பெரியமணியில்*_ *நித்திய பிதாவே! உமது நேசக்குமாரனாகிய எமது ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவின்/ உடலையும் உதிரத்தையும், ஆன்மாவையும், தெய்வீகத்தையும் எமது பாவங்களுக்காவும், அகில உலகின் பாவங்களுக்காகவும், பரிகாரமாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.* _*ஜெபமாலையின் சிறிய மணியில்*_ *இயேசுகிறிஸ்துவின் வேதனை நிறைந்த பாடுகள் வழியாக எங்கள் மீதும், எங்கள் குடும்பங்களின் மீதும், அகில உலகின் மீதும் இரக்கமாயிரும்.* _*ஐம்பது மணி முடிந்தபின்*_ *புனித இறைவா, புனித எல்லாம் வல்லவரே, புனித நித்தியரே, எங்கள் மீதும், எங்கள் குடும்பங்களின் மீதும், அகில உலகின் மீதும் இரக்கமாயிரும். (மூன்று முறை).* கடைசி ஜெபம் : *இரக்கமுள்ள இயேசுவே உம்மை நாங்கள் விசுவசிக் கிறோம். உம்மில் எங்கள் நம்பிக்கையை வைக்கிறோம். எங்கள் பலவீனத்திலும், இயலாமையிலும், எங்களுக்கு உதவியாக வாரும்.* *நீர் எல்லோராலும் அறியப்படவும், நேசிக்கப்படவும் செய்ய எங்களுக்கு வரம் தாரும். அனைகடந்த உமது அன்பில் நம்பிக்கை வைக்கவும் உமது மகிமைக்காகவும், எங்கள் மீட்புக்காகவும் உலகிலும் எம்மிலும் உள்ள தீயசக்திகளை முறியடிக்கவும் எமக்கு வரமருளும் - ஆமென்.* *என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி* *என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி;* *என் முழு உள்ளமே கர்த்தரின் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி,* *என் ஆத்துமாவே கர்த்தரையே ஸ்தோத்தரி* *கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.* _*☦️திரித்துவப் புகழ்*_ *பிதாவுக்கும்இ சுதனுக்கும்இ பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக.* ஆதியிலே இருந்ததுபோல/ இப்பொழுதும்/ எப்பொழுதும்/ என்றென்றும்/ இருப்பதாக - ஆமென். 🔥✝️🔥✝️🔥✝️🔥✝️🔥 *இயேசுவின் திரு இரத்தத்தின் மன்றாட்டு மாலை* 🔥✝️🔥✝️🔥✝️🔥✝️🔥 *ஆண்டவரே இரக்கமாயிரும்* கிறிஸ்துவே இரக்கமாயிரும் *ஆண்டவரே இரக்கமாயிரும்* *கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை கேட்டருளும்* கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும் *பரலோகத்திலிருக்கிற பிதாவாகிய இறைவா,* எங்கள்மேல் இரக்கமாயிரும். *உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா,* எங்கள் மேல் இரக்கமாயிரும். *பரிசுத்த ஆவியாகிய இறைவா,* எங்கள் மேல் இரக்கமாயிரும். *என்றும் வாழும் பிதாவின் ஒரே மகனாகிய கிறிஸ்துவின் இரத்தமே* எங்கள் மேல் இரக்கமாயிரும். *மனிதனாய்ப் பிறந்த இறைவாக்காகிய கிறிஸ்துவின் இரத்தமே* எங்கள் மேல் இரக்கமாயிரும். *புதிய, முடிவில்லா உடன்படிக்கையை ஏற்படுத்திய கிறிஸ்துவின் இரத்தமே* எங்கள் மேல் இரக்கமாயிரும். *வியர்வையாகத் தரையில் வழிந்தோடிய கிறிஸ்துவின் இரத்தமே* எங்கள் மேல் இரக்கமாயிரும். *கற்றூணில் கட்டி அடிக்கப்பட்டபோது சிந்திய கிறிஸ்துவின் இரத்தமே* எங்கள் மேல் இரக்கமாயிரும். *முள்முடி சூட்டியபோது வெளியான கிறிஸ்துவின் இரத்தமே* எங்கள் மேல் இரக்கமாயிரும். *சிலுவையில் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தமே* எங்கள் மேல் இரக்கமாயிரும். *எங்கள் மீட்பின் விலையான கிறிஸ்துவின் இரத்தமே* எங்கள் மேல் இரக்கமாயிரும். *பாவமன்னிப்புக்கு இன்றியமையாத கிறிஸ்துவின் இரத்தமே* எங்கள் மேல் இரக்கமாயிரும். *நற்கருணையில் அருந்தப்படுவதும், ஆன்மாக்களைக் கழுவித்துடைப்பதுமான கிறிஸ்துவின் இரத்தமே* எங்கள் மேல் இரக்கமாயிரும். *இரக்கம் ஆறாகப் பெருகும்; கிறிஸ்துவின் இரத்தமே* எங்கள் மேல் இரக்கமாயிரும். *பிசாசை வென்ற கிறிஸ்துவின் இரத்தமே* எங்கள் மேல் இரக்கமாயிரும். *மறைச்சாட்சியருக்குத் திடமளிக்கும் கிறிஸ்துவின் இரத்தமே* எங்கள் மேல் இரக்கமாயிரும். *இறையடியார்க்குப் பலமளிக்கும் கிறிஸ்துவின் இரத்தமே* எங்கள் மேல் இரக்கமாயிரும். *கன்னியர்களுக்கு வாழ்வளிக்கும் கிறிஸ்துவின் இரத்தமே* எங்கள் மேல் இரக்கமாயிரும். *ஆபத்தில் தவிப்போர்க்கு உதவும் கிறிஸ்துவின் இரத்தமே* எங்கள் மேல் இரக்கமாயிரும். *துன்புறுவோரின் துயர்துடைக்கும் கிறிஸ்துவின் இரத்தமே* எங்கள் மேல் இரக்கமாயிரும். *அழுகையில் ஆறுதல் அளிக்கும் கிறிஸ்துவின் இரத்தமே* எங்கள் மேல் இரக்கமாயிரும். *மனம் வருந்துவோரின் நம்பிக்கையான கிறிஸ்துவின் இரத்தமே* எங்கள் மேல் இரக்கமாயிரும். *இறப்போருக்கு மனநிறைவளிக்கும் கிறிஸ்துவின் இரத்தமே* எங்கள் மேல் இரக்கமாயிரும். *உள்ளங்களுக்கு அமைதியும் இனிமையுமான கிறிஸ்துவின் இரத்தமே* எங்கள் மேல் இரக்கமாயிரும். *முடிவில்லா வாழ்வின் பிணையான கிறிஸ்துவின் இரத்தமே* எங்கள் மேல் இரக்கமாயிரும். *உத்தரிக்கிற நிலையிலிருந்து ஆன்மாக்களை விடுவிக்கும் கிறிஸ்துவின் இரத்தமே* எங்கள் மேல் இரக்கமாயிரும். *மதிப்புக்கெல்லாம் உரிய கிறிஸ்துவின் இரத்தமே* எங்கள் மேல் இரக்கமாயிரும். *உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே !* எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். *உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே !* எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் *உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே !* எங்களைத் தயை செய்து மீட்டருளும். முதல்வர் – *ஆண்டவரே, உமது இரத்தத்தால் எம்மை மீட்டீர்.* துணைவர் – *இறைவனுடைய அரசாக எங்களை அமைத்தீர்.* செபிப்போமாக *என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! உம்முடைய ஒரே மகனை உலக மீட்பராக ஏற்படுத்தி, அவரது இரத்தத்தைப் பாவக் கழுவாயாகய ஏற்கத் திருவுளமானீரே.* *எங்கள் மீட்பின் வலையாகிய அந்தத் திரு இரத்தத்தை வணங்கி தொழுகிறோம். அதன் வல்லமையால் இவ்வுலக வாழ்வின் தீமைகளிலிருந்து எங்களைப் பாதுகாத்து விண்ணக வாழ்வை நாங்கள் பெற்று மகிழ அருள்புரியும்.* *எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் – ஆமென்.* ______________________________ *👇🏻 பாரம்பரிய இறைஇரக்க ஜெபங்கள்👇🏻* ____________________________ 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 🙏 *பிற்பகல் 3 மணி இறை இரக்கத்தின் ஜெபமாலை, மன்றாட்டு மாலை* 🙏 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 *அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருகளிடத்திலே நின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்.* *எங்கள் சர்வேசுரா! பிதாவுடையவும் சுதனுடையவும், இஸ்பிரீத்து சாந்துடையவும் நாமத்தினாலே!* *ஆமென்!* 🍁 *ஜெபமாலையின் தொடக்கம்*🍁 *விசுவாசப்பிரமாண மந்திரம்* i) *கர்த்தர் கற்பித்த ஜெபம்* ii) 3 *மங்கள வார்த்தை ஜெபம்* iii) *திரித்துவ மந்திரம்* *செபம்* -------------- இயேசுவே! நீர் மரித்தீர். ஆனால் இந்த மரிப்பு ஆன்மாக்களின் வாழ்க்கை ஊற்றாகவும் இரக்கத்தின் கடலுமா கவும் வழிந்தோடியது. ஓ! வாழ்வின் ஊற்றே! கண்டுபிடிக்க முடியாத இறைவனின் இரக்கமே உலக முழுவதையும் உம்முள் அடக்கி உமது இரக்கம் முழுமையும் எம்மீது பொழிந்தருளும். இயேசுவின் இருதயத்திலிருந்து இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே! தண்ணீரே! உம் மீது நம்பிக்கை வைக்கிறேன். ( *மும்முறை* ) *ஜெபமாலையின் பெரியமணியில் :* நித்திய பிதாவே! உமது நேசக்குமாரனாகிய எமது ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவின்/ உடலையும் உதிரத்தையும், ஆன்மாவையும், தெய்வீகத்தையும் எமது பாவங்களுக்காவும், அகில உலகின் பாவங்களுக்காகவும், பரிகாரமாக உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். *ஜெபமாலையின் சிறிய மணியில் :* இயேசுகிறிஸ்துவின் வேதனை நிறைந்த பாடுகள் வழியாக எங்கள் மீதும், எங்கள் குடும்பங்களின் மீதும், அகில உலகின் மீதும் இரக்கமாயிரும். *ஒவ்வொரு பத்து மணி முடிந்ததும்* தூய இறைவனே, தூய வல்லவரே, எங்கள் நித்தியரே, எங்களுக்காகவும், எங்கள் குடும்பங்களுக்காகவும், அகில உலகினருக்காகவும் வேண்டிக்கொள்ளும். *ஜெபமாலை யின் தேவ ரகசியங்கள்* 1, *இயேசு பூங்காவணத்தில் வியர்வையாக சிந்திய திரு இரத்தத்தைக் குறித்து தியாணிப்போமாக* 2, *கற்றூணில் கட்டுண்டு அடிக்கப்பட்ட போது சிந்திய திரு இரத்தத்தைக் குறித்து தியாணிப்போமாக* 3, *இயேசு தலையில் மும்முடி சூட்டப்பட்டபோது சிந்திய திரு இரத்தத்தைக் குறித்து தியாணிப்போமாக* 4, *இயேசு சிலுவை சுமந்து சென்றபோது சிந்திய திரு இரத்தத்தைக் குறித்து தியாணிப்போமாக* 5, *இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது சிந்திய திரு இரத்தத்தைக் குறித்து தியாணிப்போமாக* *கடைசி ஜெபம் :* இரக்கமுள்ள இயேசுவே உம்மை நாங்கள் விசுவசிக் கிறோம். உம்மில் எங்கள் நம்பிக்கையை வைக்கிறோம். எங்கள் பலவீனத்திலும், இயலாமையிலும், எங்களுக்கு உதவியாக வாரும். நீர் எல்லோராலும் அறியப்படவும், நேசிக் கப்படவும் செய்ய எங்களுக்கு வரம் தாரும். அனைகடந்த உமது அன்பில் நம்பிக்கை வைக்கவும் உமது மகிமைக்காகவும், எங்கள் மீட்புக்காகவும் உலகிலும் எம்மிலும் உள்ள தீயசக்திகளை முறியடிக்கவும் எமக்கு வரமருளும். என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி; என் முழு உள்ளமே கர்த்தரின் பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி, என் ஆத்துமாவே கர்த்தரையே ஸ்தோத்தரி கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. *திரித்துவப் புகழ்* சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்ததுபோல/ இப்பொழுதும்/ எப்பொழுதும்/ என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்! 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 *இரக்கத்தின் மன்றாட்டு மாலை* 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும் பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி அதி பரிசுத்த திரித்துவமாயிரக்கிற ஏக சர்வேசுரா - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி சகலமும் படைக்கப்பட காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் பரலோக ஆரூயர் அருபிகளைப் படைக்க காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் ஒன்றுமில்லாமையிலிருந்து எங்களை உருவாக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் கடவுளின் சர்வ வல்லமையை மானிடருக்கு வெளிப்படுத்த காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் உலகம் முழுவதையும் பரிபாலிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் மகா பரிசுத்த திரித்துவத்தின் பரம இரகதியத்தை எங்களுக்கு வெளிப்படுத்த காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் உலகத்தை மீட்க காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் எங்களை தினமும் அர்ச்சிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் எங்களுக்கு நித்திய வாழ்வை அருளக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் நாங்கள் அடையவிருக்கும் தண்டணைகளிலிருந்து எங்களைக் காப்பாற்றி வரக் காரணமாயிருக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் பாவச் சேற்றிலிருந்து எங்களை மீட்டுக் கைதூக்க காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் மனித அவதாரத்தையும், பாடுகளையும் மரணத்தையும் ஏற்றுக்கொள்ள காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் சகலருக்கும் எப்பொழுதும் எல்லாவிடங்களிலும் உதவியளிக்கக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் உமது அருட்கொடைகளை முன்னதாகவே எங்களுக்கு அருளக்காரணமான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் தெய்வீகப் பரம இரகசியங்களை எங்களுக்கு வெளிப்படுத்தித் துலங்சச் செய்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் சத்திய திருச்சபையை ஸ்தாபித்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் அருட்சாதனங்களை எற்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் ஞானல்நானத்திலும் பச்சாத்தாபத்திலும் இரக்கத்தை அருளும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் திவ்விய நற்கருணையிலும் குருத்துவத்திலும் இறை இரக்கத்தை தந்தருளிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் பாவிகளை மனம் திருப்புவதில் இறைஇரக்கத்தை காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் அவிசுவாசிகள் ஒளிபெறுவதில் இறை இரக்கத்தைக் காண்பிக்கும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் நீதிமான்களின் அர்ச்சிப்பில் இறை இரக்கத்தை வெளிப்படுத்தும் இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் உமது திருக்காயங்களிலிருந்து சுரந்தோடிய இரத்தத்தின் வழியாக இறை இரக்கத்தை வெளிப்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் உமது மகா பரிசுத்த திரு இருதயத்திலிருந்து சுரக்கும் இரத்தத்தினால் எங்களை புனிதப்படுத்திய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் இரக்கத்தின் தாயாகிய புனித மரியாளை எங்களுக்குத் தாயாக தரக் காரணமாயிருந்த இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் நோயாளிகளுக்கும் துன்பப்படுவோர்களுக்கும் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் நொறுங்கிய இதயங்களுக்கு ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் கதிகலங்கித் தவிக்கும் ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் மரிப்போரின் அடையாளமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆன்மாக்களின் ஆறுதலான இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் சகல புனிதர்களின் பரலோக ஆனந்தமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் மீட்கப்பட்டவர்களின் பரலோக ஆனந்தமாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் அற்புதங்களின் வற்றாத துணையாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவே - உம்மீது நம்பிக்கை வைக்கிறோம் உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மரிப்புருவையாகிய இயேசுவே, எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மரிப்புருவையாகிய இயேசுவே, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மரிப்புருவையாகிய இயேசுவே, எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி *🌷முதல்வர்:* ஆண்டவருடைய இரக்கங்கள் அவருடைய சகல படைப்புகள் பேரிலும் உள்ளன. *🌹துணைவர்:* ஆதலார் ஆண்டவருடைய இரக்கத்தை என்றென்றைக்கும் பாடுவேன். *செபிப்போமாக:* 🙏 மகா தயை நிறைந்த இறைவா! இரக்கத்தின் தந்தையே! ஆறுதலின் தேவனே! உம்மில் விசுவாசமும் நம்பிக்கையும் கொண்ட ஆன்மாக்கள் மீது இரக்கம் கொண்டீரே! உமது அளவற்ற இரக்கத்தை குறித்து எங்கள் பேரின் உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும். இத்துன்ப உலகில் எங்களுக்கு நேரிடும் சோதனைகளிலும் உமக்கு பிரமாணிக்கமாய் இருக் உமது இரக்கத்தின் அருட்கொடைகளை எங்கள் மீது நிறைவாகப் பொழிந்தருளும். என்றும் வாழ்பவரும், எல்லாம் வல்லவருமாகிய எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். -ஆமென்! *செபிப்போமாக*🙏 *என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! உம்முடைய ஒரே மகனை உலக மீட்பராக ஏற்படுத்தி, அவரது இரத்தத்தைப் பாவக் கழுவாயாகய ஏற்கத் திருவுளமானீரே. எங்கள் மீட்பின் வலையாகிய அந்தத் திரு இரத்தத்தை வணங்கி தொழுகிறோம். அதன் வல்லமையால் இவ்வுலக வாழ்வின் தீமைகளிலிருந்து எங்களைப் பாதுகாத்து விண்ணக வாழ்வை நாங்கள் பெற்று மகிழ அருள்புரியும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் – ஆமென்.* 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

Share with someone who needs prayer today:

WhatsApp Facebook X

Other prayers from today

Pray

Get prayer reminders?

We'll gently remind you at morning, midday, and night prayer times.

Install to home screen?

Faster access + works offline. No app-store install.